அதிராம்பட்டினம் CMP லைன் மெயின் சாலை குண்டும் குழியுமாக, மேலும் மழைக் காலமாக இருப்பதால் சேரும் சகதியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் முதல் அப்பகுதியாக செல்வோர் அனைவரையும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர் என்பதை அனைவரும் அறிவீர்கள்! இதற்காக பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வந்தது.

நமது சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதனை துரிதமாக நடவடிக்கை எடுத்து, அரசு ஆணையும் பிறப்பித்து உள்ளதும்,
பொது மக்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை அளித்தது!

வண்டிப்பேட்டையில் இருந்து CMP லைன் மெயின் சாலை முதல் நடுவிக்காடு (பட்டுக்கோட்டை சாலை) வரை விரைவில் தார்சாலையாக மாற்றம் காண உள்ளது குறிப்பிடத்தக்கது!

தமிழக முதல்வர் அவர்களுக்கும், நமது சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் முன்னாள் சேர்மன், தஞ்சை மாவட்ட பொருளாளர் மற்றும் இரண்டாவது வார்டு உறுப்பினர் S.H.அஸ்லம் அவர்கள் நன்றிகளை வீடியோ மூலம் பதிவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது!

வீடியோ காணொளி ⬇️

https://youtu.be/45jPE3oQGE4