அதிரையை அடுத்த புதுப்பட்டினம் கடற்கரை இன்று காலை கடலில் இருந்து ஒரு சடலம் மிதந்து வந்துள்ளது. அதனை கண்ட அக்கம்பக்கத்திலுள்ள மீனவர்கள், பொதுமக்கள் அருகே சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை தொப்புள்கொடி அறுபடாமல் சடலமாக கிடந்துள்ளது. அதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற கொடூர தாய் யார் என காவல்துறை உரிய விசாரணை செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.