முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அதிரை அண்ணா படிப்பகத்தில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி அவைத் தலைவர் திரு. N.K. சபீர் அவர்கள் தலைமையில் நடைபெற, அதிரை நகர செயலாளர் திரு ராம குணசேகரன் அவர்கள் முன்னிலை வகித்தார். நிகழ்வின் போது, மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டு தங்களது மரியாதையைச் செலுத்தினர்.






Comments (0)
No comments yet.
Write a comment