நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இன்று 75வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. சரியாக 7:15 மணி அளவில் துவக்கிய இந்நிகழ்ச்சியில் முதலாவதாக ஜே.முஹம்மது யஹ்யா அவர்கள் கிராஅத் ஓதி ஆரம்பித்தார், M.F.முஹம்மது சலீம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினர், ஹாஜி முஹம்மது சாலிஹ் (சங்க தலைவர்) அவர்கள் நிகழ்ச்சியின் தலைமை தாங்கி தேசிய கோடியை ஏற்றி சிறப்பித்தார், சங்க நிருவாகிகள் முன்னிலை வகித்தனர்,

சிறப்புரை உரை : M.I. முஹம்மது ஜாபிர் (ஸலாஹி) அவர்கள்

இந்த விழாவில் சங்க நிர்வாகிகள், முஹல்லா வாசிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கடந்துகொண்டனர், இறுதியாக அனைவருக்கும் இனிப்பு வழங்கி துஆ உடன் நிறைவு பெற்றது.